Inauguration of petitions Enquiry and Tracking Sysytem in Perambalur!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் வகையில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி திறந்து வைத்தார்.

PETS கணினி மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது, ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் மனுக்கொடுக்க வரும் மனுதார்களின் முகவரிகள் அடங்கிய முழுத் தகவல்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்களால் (Receptionist) இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும்.

மனுதார்களை காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் (Receptionist) எவ்வாறு வரவேற்றார்கள் என்பதையும் அவரகள் மரியாதையுடன் நடத்தப்பட்டார்களா? மனுதாரர்கள் எவ்வித பிரச்சனை சம்மந்தமாக புகார் செய்துள்ளார்கள் மற்றும் அவர்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டதா? மனுதாரர்கள் கொடுத்த புகாருக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளதா, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஒவ்வொருவரும் மனுதாரர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை மனுவிசாரணை கண்காணிப்பு மையத்தின் மூலம் ஒவ்வொரு புகார் மனுதாரர்களிடமும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்துக்கள் (Feedback) தெரிந்துகொள்ளப்படும். எவ்வித குற்றங்கள் தொடர்பான மனுக்கள் அதிகம் பதிவாகிறது

என்ற விவரங்களை காவல் துறை உயர் அதிகாரிகள் அறிந்து கொள்ள முடியும், வரும் காலங்களில் காவல் நிலையங்களுக்கு வராமலேயே புகார் மனுதார்கள் தாங்கள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!