Incentive Skill Development Training for Construction Workers : Perambalur Labor Welfare Department Notification!

பெரம்பலூர் மாவட்ட, தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது இத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 40 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சிக்காண கட்டணம், உணவு. தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களான கொத்தனார். பற்றவைப்பவர், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துநர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர் மற்றும் சாரம் கட்டுபவர் ஆகிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 3 மாத பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதம் காஞ்சிபுரம் மாவட்ட நீவளுரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும்.மேலும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்க தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது நல வாரிய அட்டை கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ((சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!