Incessant rains release excess water in Tholudur dam: Perambalur collector inspected!

தொடர் மழை காரணமாக வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதையும், கீழக்குடிக்காடு அணைக்கட்டிலிருந்து உபரிநீர் வெளியேறுவதையும் பெரம்பலுர் கற்பகம் இன்று பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியில் வெள்ளாறு அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கல்வராயன்மலை, சேர்வராயன் மலை மற்றும் கொல்லிமலைபடபகுதியில் சரிவிப்பகுதியில் வெள்ளாற்றின் வடிநிலம் சுமார் 7520.87 சதுர கிலோமீட்டர் ஆகும்.

வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு 1913-1918 ஆம் ஆண்டு தொழுதூர் கிராமத்தில் சாலையோடு கூடிய 16 மதகுகளோடு கட்டப்பட்டதாகும். இந்த அணைக்கட்டின் நீளம் 179.22 மீட்டர் இகும். தண்ணீர் வரத்துப் பரப்பு 1083.62 சதுர மைல் ஆகும்.

இந்த அணைக்கட்டின் இடது கரையில் ஊட்டுக்கால்வாய் வெட்டப்பட்டு கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கும், வலது கரையில் உள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒகளுர், வடக்கலுார், வடக்கலுார் அக்ரஹாரம் ஆகிய 3 ஏரிகளுக்கும் வெள்ள நீர் திருப்பி விடப்படுகின்றது. . தொழுதுார் அணைக்கட்டின் மூலம் மொத்தம் 26 ஏரிகளும் 10,468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இடது கரையில் அமைந்துள்ள ஊட்டுகால்வாயின் நீளம் 5.7 கி.மீ இகும். தண்ணீரின் கொள்ளளவு 677.85 மில்லியன் கன அடியாகும். இந்த கால்வாயிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடி ஆகும். இந்த ஊட்டுக்கால்வாயின் மூலம் அரங்கூர் ஏரி, வாகையூர் ஏரி, ஆக்கனூர் ஏரி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது.

இந்த ஊட்டு கால்வாயின் மூலம் இந்த நான்கு ஏரிகளிலிருந்து 65.60 ஹெக்டர் நிலங்களில் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் 63 கிராமங்களில் உள்ள 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணைக்கட்டின் வலதுபுறம் ஒகளூர் வாய்க்காலின் தலைப்பு மதகு அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒகளுர் ஏரியின் மூலம் 823.28 ஏக்கர்களும், வடக்கலூர் ஏரி மூலம் 160.23 ஏக்கர் நிலங்களும், வடக்கலூர் அக்ரஹாரம் ஏரியின் மூலம் 152.42 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 1135.93 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வெள்ளாற்றில் வரும் நீரின் மூலம் கீழக்குடிகாடு அணைக்கட்டுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகின்றது. இதன்மூலம் அத்தியூர் ஏரி, கிழுமத்தூர் ஏரி, வயலூர் ஏரி மற்றும் கைபெரம்பலூர் ஏரி ஆகிய 4 ஏரிகளுக்கு நீர் செல்கின்றது. இந்த நான்கு ஏரிகளின் மூலம் மொத்தம் 1193 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!