Incident of violence against women in Manipur; DMK District Women’s Team Protest Demonstration in Perambalur!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் பெரம்பலூர் திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் – மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி இராஜேந்திரன், எம்.எல்.ஏ. பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மணிப்பூர் அரசைக் கண்டிக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில்மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், என்.ஜெகதீஸ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன்,
மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, மா.இராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய சேர்மன்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.