Increase in Cancer patients in Perambalur district

தமிழகத்தில், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த மாவட்டத்தில் மக்கள் வாழ்வாதார தேவைகளுக்கு வெளியூர் முதல் வெளிநாடுகள் வரை சென்று வருகின்றனர். இயற்கை சூழல் நிறைந்த இம்மாவட்டத்தில் மக்களின் அறியாமையாலும், புகையிலை, பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையானதாலும், உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பலகாரம் உள்ளிட்ட பண்டங்களை சாப்பிட்டதால் வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது புற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் சுகாதார கேடும் புற்றுநோய்க்கு ஒருகாரணமாகி வருகிறது. மேல்சிகிச்சைக்காக பலர் புதுச்சேரி சென்னை சென்று சிகிச்சை பெற்றும் நிம்மதியாக இல்லை. மேலும், பெரும்பாலானோர் கைவிடப்பட்ட நிலையில் பல குடும்பங்கள் மீளா சோகத்தில் மூழ்கியுள்ளன. பல குழந்தைகளின் கனவுகள் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், புற்றுநோயை தடுக்க தீவிர தடுப்பு மற்றும் விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயை போன்றே தற்போது புற்றுநோயும், வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்து புற்றுநோய்கள் உண்டாகி உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நல்வாழ்வை நடடிவக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!