Increase in income limit for scholarships for BC, MBC and DNT postgraduate students: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2021-2022 ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும்
சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், 2021-2022ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்ஸி., எம்.பில்.. எம்.பி.ஏ., பிஎச்.டி,) பாலிடெக்னிக் (டிப்ளமோ-மூன்றாண்டு பட்டயப்படிப்பு), தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் புதியதாக விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை dir-bcmw@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என
தெரிவித்துள்ளார்.