Increased attendance of dengue fever in Perambalur: Transition to Tiruchi
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏடிஎஸ் கொசுக்கடியால் உண்டாகும் நோய் டெங்கு வைரல் காய்ச்சல். பெரம்பலூரில் தற்போது பெரம்பலூர் அரசு தலைமை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயளிகளை பரிசோதித்த போது டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு தனி அறை ஒதுக்கி சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 3க்கும் மேற்பட்டவர்களை திருச்சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொசுக்களை ஒழிக்க இந்தாண்டு நகராட்சி, மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அரசாங்க அதிகாரிகளுக்கும், அரசியல வருமானம் பார்க்கும் பணியிலேயே கவனம் செலுத்துவார்கள் பொதுமக்களை அவர்களுடைய அக்கறை மிகவும் குறைவாகி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கொசுக்களிடம் இருந்து காத்துக் கொள்ள அரசாங்கத்தை நம்புவதைவிட நோய் வரும் முன் காப்பதே சிறந்தது. வீட்டுக்கு வீடு நொச்சி செடி அல்லது நொச்சி இலையை வீட்டிக்குள் வைப்பதன் மூலம் கொசுக்கள் வீட்டினுள் வருவதில் இருந்து தற்காத்து கொள்ளலாம். நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்வது சிறந்தது.