INDEPENDENCE DAY CELEBRATION AT PERAMPALUR, COLLECTOR HOYS THE NATIONAL FLAG.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத் நாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் சிறப்பு செய்தார். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசிய கொடி நிறத்திலான பலுான்களையும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர்.
தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 45 காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 286 பயனாளிகளுக்கு ரூ.2,04,74,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 286 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இன்றைய நிகழ்வில், ஆயுதப்படை ஆய்வாளர் தங்கம் தலைமையில் முதலாம் படைப் பிரிவிற்கும், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், இரண்டாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுகனேஸ்வரியும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ்சும் தலைமையேற்று வழி நடத்தி சென்றனர். மேலும் ஊர்க்காவல் படை அணிவகுப்பை ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தினர்.
286 பயனாளிகளுக்கு ரூ.2,04,74,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
286 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி,பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கௌதம புத்தர் பள்ளி ஆகிய 07 பள்ளிகளிலிருந்து சுமார் 600 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதையும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். பாடாலூர் ஊராட்சி திருவளர்குறிச்சி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திலும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சமபந்தி விருந்திலும் கலந்து கொண்டார்.