Indian Air Force Jobs: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மார்ச் 31-ம் தேதி வரை, தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in. என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
26.12.2002 அல்லது அதற்குப்பிறகு பிறந்தவர்கள் மற்றும் 26.06.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். அக்னிவீரர்களுக்கான இணையவழி தேர்வு 10.05.2023 அன்று நடத்தப்படும். தேர்வானது எழுத்துத் தேர்வு உடல் தகுதி தேர்வு மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் நடைபெறும்.
இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50,000 முதல் 60,000 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.03.2023 அன்று காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04328-225352 என்ற தொலைப்பேசி எண்ணிற்கோ அல்லது 9499055913 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவோ தகவல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்வதோடு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்கள்.