Indian Army Agniveer Vayu Recruitment: Perambalur Collector Information!
2024-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்வு பெங்களூரில் அமைந்துள்ள 7-வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.
இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள். 02.01.2004 முதல் 02.07.2007 கால இடைவெளியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கீ போர்டு, வயலின், பியனோ உள்ளிட்ட பல்வேறு கருவிகளில் தேர்ச்சி பெற்ற இசை கலைஞர்களும் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100/- ஆகும்.
இது ஒரு மத்திய அரசுப்பணி. மேலும் அனைத்து விவரங்கள் அறிய 22.05.2024 முதல் 05.06.2024 வரை http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் அதிக அளவில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு பேரணிக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும், என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.