Indian Bank’s Self Employment Opportunity to Apply for Institutional Free Training

இந்தியன் வங்கியின் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் இலவச பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே அரசாங்க பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இப்பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கான தையல்க்கலை, கம்ப்யூட்டர் டேலி ஆகிய பயிற்சி 30 முழு வேலை நாட்களாகவும், காளான் வளர்ப்பு 10 முழுவேலை நாட்களாகவும் இலவசமாக தொடங்கப்பட உள்ளது.

பொதுமக்களிடையே அதிக தேவையும், வரவேற்பும் உள்ளது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர், புதிய தொழில் முனைவோர் இந்த பயிற்சிக்கு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் 36 நபர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க குறைந்த பட்ச கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது மேற்பட்டவர், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி செலவு, பயிற்சி பொருட்கள், உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-திருச்சி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுனத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!