Indian Constitution Day: Painting competition for students in Perambalur
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ஹோப் தொண்டு நிறுவனம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திர இணைந்து இளைஞர்களுக்கு ஓவிய போட்டி, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள ஹோப் தொண்டு நிறுவன வளாகத்தில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் இளைஞர்கள் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.நேரு யுவ கேந்திர பெரம்பலூர் மாவட்ட அலுவலர் கீர்த்தனா இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹோப் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் திவ்யா தலைமையுரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.