Indian Union Yuthulet Strategy to Declare BJP’s Rule: Indian Union Muslim League Announcement
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் இளைஞர் அணி தேசிய செயற்குழு கூட்டம் இன்று 24-9-2018 திங்கட்கிழமை சென்னை எழும்பூர் மியூசியூம் எதிரிலுள்ள ஹோட்டல்பாம்சோர்வில் தேசிய யூத் லீக் தலைவர் ஷாபிர்கப் பார் தலைமையில் நடைப்பெற்றுது
இச்செயற்க்குழுவில் தேசிய யூத்லீக் பொதுச்செயலாளர் சி.கே.சுபேர், தேசிய பொருளாளரும் தமிழக யூத் லீக் தலைவருமான எம்.கே முகம்மது யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில யூத் லீக் தலைவர்களும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயற்குழுவில் தேசிய தலைவர் போரசிரியர், கே.எம்.காதர் மொய்தீன், தேசிய பொதுச்செயலாளர் குஞ்ஞாலி குட்டி எம்.பி கே.ஏ.எம.முகம்மது அபூபக்கர்
எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி அப்துல்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்
பின்னர் போராசியர் கே.எம் காதர் மொய்தீன், கே.டி. குஞ்ஞாலி குட்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் இளைஞர் பிரிவான முஸ்லீம் யூத் லீக் தேசிய செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் மூன்றுமுக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன
பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களை பிளவுபடுத்தி மதசார்பின்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் சமுக நீதியைபுறம் தள்ளி விட்டு அரசியல் சட்டத்திற்கு பாதகமாக பாசிச ஆட்சியை நடத்திவருகிறது பா.ஜ.க வுக்குஎதிரான சக்திகளை ஒருங்கினைத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்க்
கொள்வது எனவும் பா.ஜ.க ஆட்சியை விழ்த்தவும் இக்கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க வோடு ஓட்டும் உறவும் இப்பொழுதும் கிடையாது, தேர்தலுக்கு பிறகும் கிடையாது எனவும் மத்தியில் உள்ள பா.ஜக வையும் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியையும் வீழ்த்துவோம் என்று அறிவித்துள்ளார் அவரை இக் கூட்டம் பாராட்டுக்கிறது.
மனித உரிமை சுதந்திரத்தை பறித்து இடசாரி சிந்தனை உள்ளவர்களை அடக்கும் பா.ஜ.க அரசின் செயலை இக் கூட்டம வன்மையாக கண்டிக்கிறது ரபேல் போர்
விமானம் ஊழலை கண்டுபிடிக்க பாராளுமன்ற குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது அதை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
வரவேற்கிறது, வலியுறுத்துகிறது.
அப்போதுதான் பிரதமர் மோடியின் ஊழல் வெளியுலகத்திற்கு தெரிய வரும் பா.ஜ.கவை தவிர்த்து இந்திய நாட்டிலுள்ளஅரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுகளை ஒருங்கினைத்து “ஐக்கிய ஜனநாயக இளைஞர் முன்னணி”யூ. டி.ஓய்.எப் ஒன்றை அமைத்துள்ளோம் முதற்கட்டமாக மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய பேரணியை டெல்லியில் அடுத்த மாதம் நடத்தவுள்ளோம், இதில் பல்லாயிரகணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
நவம்பர் 24-ம் தேதி கேரளாவில் காசா கோரட்லிருந்து திருவனந்தபுரம் வரை இந்திய யூனியன் யூத் லீக் சார்பில் மக்களை சந்திக்கும் நடைப்பயணம் நடைப்பெறுகிறது.
பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த பல்வேறு வியூகங்களை இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் எடுத்து வைத்தார்கள் அதன் மூலம் அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்கள்.