
India’s longest lane bridge: Prime Minister Modi opened up
இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ. நீளத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு முறை காலக்கெடுக்களைக் கடந்த பாலம், கடந்த டிசம்பர் 3ம் தேதி பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரூ.5900 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இப்பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் ஆகும். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன