India’s value has risen due to Prime Minister Modi: Parivendar, the candidate who collected votes in the lotus symbol!
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுபடடார். வடக்கு ஈச்சம்பட்டி பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. வடக்கு ஈச்சம்பட்டி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர பேசியதாவது:
2019- தேர்தலில் 6 லட்ச வாக்குகள் அள்ளி தந்தீர்கள். நான் செய்த பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையாக புத்தகமாக கொடுத்துள்ளேன்.
எம்.பி நிதியில் முன்னுரிமை கொடுத்தது கல்விக்காக. கடந்த 2019- தேர்தலில் 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி தருவேன் என்று சொன்னேன், வாக்குறுதியை நிறைவேற்றினேன்.
நீங்கள் யோசிக்க வேண்டும். வேறு எந்த எம்.பி இது போன்று செய்துள்ளார்களா?
10 ஆண்டுகள் மோடி சிறந்த ஆட்சி செய்துள்ளார். மோடி வந்த பிறகு தான் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நல்ல பிரதமர் கிடைத்துள்ளார் நமக்கு.
என்னை வெற்றி பெறச் செய்தால் 1500 குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
பாஜக,ஒ பிஎஸ் அணி, த.மா.கா, அ.ம.மு .க, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், ஐ ஜே கே நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.