Innovative training of the Integrated Child Development Program for People’s Representatives; Perambalur MLA Prabhakaran started!

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஹோட்டலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சியை எம்.எல்.ஏ. பிரபாகரன் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் குழந்தை திருமணத்தை தடுத்திட கலெக்டர் ஆலோசனையின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வேர்ல்டு விசன் இந்தியா மூலம் தயாரிக்கப்பட்ட “நான் ஆசைப்படுகிறேன் ஆனால் அவசரப்படவில்லை” என்ற தலைப்பில் குழந்தை திருமண விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு வெளியிட்டுள்ள 181 தொலைபேசி எண் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெ.ரவிபாலா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூமா, பெரம்பலூர் ஒன்றிய சேர்மன்கள் மீனாஅண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா (குரும்பலூர்), பாக்கியலெட்சுமி (பூலாம்பாடி), வள்ளியம்மை ( அரும்பாவூர் ) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!