Insightful counseling for LKG to 8th class students at Almighty School, Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பி ஜே ஆர் அகாடெமியை சேர்ந்த முனைவர் பென்னட் ஜே ராக்லண்ட் கே ஜி முதல் 8ம் வகுப்பு வரையிலான பெற்றோர்களுக்கு குழந்தைகளின் நுண்ணறிவு திறன் அறிதல் குறித்த கலந்தாய்வு கூட்டம், தமிழ்நாட்டில் முதல் முறையாக சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் சந்திரோதயம் வரவேற்றார். துணை முதல்வர் மு ராஜேந்திரன் உள்பட 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரளாக பங்கு கொண்டனர்.
நுண்ணறிவு திறனறிதலில் பல்வேறு சர்வதேச விருதுகள் பெற்ற முனைவர் பென்னட் ஜே ராக்லண்ட் மாணவர்களுக்கும் நுண்ணறிவு பயிற்சி பற்றி பெற்றொர்களுடன் கலந்தாய்வை செய்தார்.
பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் நுண்ணறிவை பற்றிய புரிதல் மற்றும் அதனை அறிந்து கொள்ளும் முறை பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டிலேயே முதல் பள்ளியாக ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி இந்த சேவையை வழங்க முயற்சி செய்திருப்து குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்: