Insistence at the Road Workers Union Conference that the government should not privatize highway maintenance work
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க பெரம்பலூர் கோட்ட 7வது மாநாடு துறைமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கோட்ட தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக இணைச்செயலர் எ.ராஜா வரவேற்றார். துணைத் தலைவர் பி.முத்து அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில செயலாளா; சி.மகேந்திரன் துவக்கவுரை ஆற்றினார். கோட்ட செயலாளர் சி;சுப்ரமணியன் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் எ.அமசராஜ் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரை ஆற்றினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வெண்டும், தொழில் நுட்பத்திறன் பெறா சாலைப்பணியாளர்களின் ஊழியர்களுக்கான ஊதியம் 5ஆயிரத்து 200, 20ஆயிரத்து 200 மற்றும் தர ஊதியம் ஆயிரத்து தொள்ளாயிரம் வழங்கி அதனடிப்படையில் 7வது ஊதிய மாற்றப்பலன்கள் வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே நடத்த வேண்டும், ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி மற்றும் நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கி சலவைப்படியும் வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தனர். நிர்வாகி கே.மணிவேல் நன்றி கூறினார்.