Instead of building shops at Perambalur new bus station, structural defects should be fixed: Traders, commuters demand!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஆத்தூர், பெங்களூர், ஈரோடு, கோத்தகிரி, கோவை, பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், துறையூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் நாள்தோறும் வந்து செல்கின்றன, அதில், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து இறங்கி செல்கின்றனர்.

பெரம்பலூர், மாவட்டத்தின் தலைநகரமாகி சுமார் 25 ஆண்டுகள் எட்டிய போதும், பேருந்து நிலையம் இன்னும் தரம் உயர்த்தபட வேண்டி உள்ளது. கடந்த கால ஆட்சியாளர்கள், பேருந்து நிலையத்தை சுற்றிலும் இருந்த இடத்தை வீணாக்கி நகராட்சி அலுவலகத்தை கொண்டு வந்தனர்.

மைதானமாக இருந்த இடத்தில் பொதுமக்கள் பொழுபோக்கிற்காக பொருட்காட்சி, கண்காட்சி, சர்க்கஸ், புத்தக கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்தவும், அரசியல் கட்சியினர் கூட்டங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டும் வந்தது. தற்போது அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் போது கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் இடத்தையே வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமானம் செய்து விட்டால் வேறு இடம் சிரமத்திற்கு உள்ளாகும்.

சில ஆண்டுகளுக்கு பின்னர், ஆட்சி செய்தவர்களும், பேருந்து நிலையத்திற்கு அடிப்படை கட்டடைப்பு வசதி செய்யாமல் மீண்டும் கட்டிங்களாக சுற்றிலும் முறையான திட்டமிடல் இல்லாமல் தொடர் கடைகள் கட்டப்பட்டது. இதில், நகராட்சிக்கு வந்த வருமானத்தை விட, கட்டியதில் ஒரு பங்கும், வாடகைக்கு விட்டதில் ஒரு பங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அதிக லாபம் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு – பகல் என நீண்ட பயணத்தில் வருவோர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க சுத்தமான கழிப்பிட வசதிகள் இல்லை, நல்ல குடிநீர் வசதி இல்லை. ஓய்வறைகள் இல்லை, பொருட்கள் வைக்கும் அறை இல்லை, நோயாளிகள், முதியோர்கள் பேருந்தில் வந்து, வாடகை வாகனங்களை அமர்த்தி செல்ல போதுமான வசதிகள் இல்லை, வெயில் மழை காலங்களில் பயணிகளுக்கு நிழற்குடைகளும் இல்லை.

அயன்பேரையூர், வி.களத்தூர், பொன்னகரம், வேப்பூர், கல்பாடி, கொளக்காநத்தம், தெரணி, போன்ற பகுதிகளுக்கு செல்வோர்களுக்கு பேருந்துகளில் ஏறி இறங்க சரியான இடம் இல்லை. மற்ற ஊர்களில் இருப்பது போல ஒரே வளாகத்தில் நகரப் பேருந்து, புறநகர் பேருந்து என தனித்தனியாக நிறுத்தும் இடங்கள் இல்லை. மினி பஸ்கள் வந்து செல்ல இடமில்லை என தெரிவிக்கின்றனர்.

மேலும், சேவை செய்ய வேண்டிய அரசு நகராட்சி நிர்வாகம் தனியார் கம்பனியை போன்று லாப நோக்கில் செயல்படுபவதாக பயணிகள் குறைகளை தெரிவிக்கின்றனர். மேலும், தற்போதைய நகராட்சி நிர்வாகம் புதிய கடைகளை கட்டுவதற்கு பதிலாக பேருந்து நிலையத்தின் அடிப்பபடை வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் பொதுமக்கள், பயணிகள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய ஆட்சியாளர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தை நவீனமாக மாற்றி புணரமைத்து மக்கள் சேவையில் முன்மாதிரியாக விளங்க செயல்பட வேண்டும் என்றும் பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!