Insurance for paddy crop: Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் திருந்திய பாரத பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (RPMFBY) கீழ் 2023-24 ராபி சிறப்பு பருவ பயிரான நெல் சம்பா பயிரினை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம், என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
2023-24-ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிர் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2023 மற்றும் செலுத்த வேண்டிய பீரிமியத் தொகை ஏக்கருக்கு ரூ.567 ஆகும்.
விவசாயிகள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.