Interest in live classes: Most of the students in Perambalur district came to schools today.

பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேரடி வகுப்புகள் தவிர்க்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இன்று துவக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டன. அதிக அளவில் பள்ளிகளுக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு பள்ளிகள் சார்பில், சானிடைசர், மற்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க்குகளும் வழங்கப்பட்டது.

மேலும், பள்ளிக்கு திறப்பதால், நேரடி வகுப்புகளில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் சந்தேகங்களை தீர்க்க முடியும் என்பதோடு, மற்ற மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும், பதில்களை தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு, முழு கவனத்துடன் படிக்க முடியும் என்பதோடு, ப்ரீ-பையர் போன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் குழந்தைகள் பாதுகாப்பாக படிக்க முடியும்.

அதோடு, மீன்பிடிக்க செல்வது, ஊர் சுற்றுவது, நீர்நிலைகளில் குளிக்க செல்வது போன்ற செய்கைகளில் இருந்தும் காக்கமுடியும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனுப்பி வைத்துள்னர்.

பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயம் இல்லை என்ற நிலையிலும், இன்று மாவட்டத்தில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து உள்ளனர்.

கொரோனாவால் ஆரம்பக் கல்வியின் கற்றலில் குழந்தைகள் பின்னடைவு அடைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகள் பெரும் பயனாக இருக்கும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!