Interest waiver if principal is paid on loan; Perambalur Collector Notification!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் விட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ )மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (NSFDC) மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சி கழகம் (NSKFDC) ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 வரை ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் எனவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (NSFDC) மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சி கழகம் (NSKFDC) ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும் எனவும் இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மேற்கண்ட திட்டத்தில், கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து, கடன் தொகைக்கு நிலுவையில்லா சான்று வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயனாளிகள் பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!