International businessman DATO S PRAKADEESH KUMAR, Minister CV Ganesan and others worship at the ancient Valikandapuram Valeeswarar Temple!
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும். இக்கோவிலுக்கு பெரம்பலூர் மட்டுமல்லாது பிறமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் டத்தோ பிரகதீஸ்குமார் சார்பில் பொங்கலையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. சுவாமி,அம்பாள், விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு பால்,பன்னீர் ,சந்தனம்,தேன்,பஞ்சாமிர்தம்,விபுதி மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பூலாம்பாடி டத்தோபிரகதீஸ்குமார், ப்ளஸ் மேக்ஸ் நிறுவன்தின் மேலாண் இயக்குனர் ரந்தினி பிரகதீஸ்குமார், தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை சில்க்ஸ் சேகர், குமரன் சில்க்ஸ் பாபு , திமுக மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், திமுக இளைஞரணி துணைஅமைப்பாளர் டிஆர்.சிவசங்கர்,தொழிலதிபர்கள் மன்மணி, இசைபாலு உட்பட பலர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.