International businessman DATO S PRAKADEESH KUMAR, who donated to the project for the improvement of his hometown, reviewed the works!

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி பேரூராட்சியில் நடைபெற்றுவரும் நமக்கு நாமே திட்டப்பணிக ளை டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேருராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 33கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படைவசதி கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக டத்தோ பிரகதீஸ்குமார் அவர்கள் அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் 11கோடி ரூபாய் தர உறுதியளிக்கப்பட்டு மூன்று கட்டங்களாக மொத்தம் 2கோடி ரூபாய்இதுவரை வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியை வைத்து பூலாம்பாடி பேரூராட்சியில் சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் கட்டுதல்,குடிநீர் பைப்லைன் அமைத்தல்,சிறுபாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை டத்தோ பிரகதீஸ்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இருசக்கரவாகனத்தில் சென்ற அவர், 11-வார்டு பாஞ்சாளியம்மன் தெரு.சிமெண்ட் சாலை அமைத்தல், கரிகாலன் தெரு சிமெண்ட் சாலை மற்றும் கல்வெட்டு அமைத்தல், பஜனமடதெரு சிமெண்ட் சாலை அமைத்தல், தேவராஜன் நகர் தார்சாலை குடிநீர் இணைப்பு கழிவுநீர் கால்வாய் தெருவிளக்கு, ஆபிரகான் தெரு தார்சாலை மற்றும் குடிநீர் இணைப்பு பணி, தில்லையாடி வள்ளியம்மை தெரு கழிவுநீர் கால்வாய் அமைப்பது, கந்தசாமி கோவில் தெரு சிமெண்ட் சாலை மற்றும் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைப்பது, மங்களமாரியம்மன் தெரு சுற்றுச்சுவர் அமைப்பது, பூபதி குட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல், மேலசீனிவாசபுரம் சிமெண்ட் சாலை அமைத்தல், இப்ராகிம் தெரு சிமெண்ட் சாலை அமைத்தல்,மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் அமைத்தல், சீனிவாசபெருமாள் கோவில் தெரு இருபுறமும் மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் உயரப்படுத்துதல், தர்மராஜா கோவில் தெரு இருபுறமும் மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் உயரப்படுத்துதல், புதுத்தெரு மற்றும் பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் அமைத்தல், போன்ற பணிகளை பார்வையிட்டும் தொடங்க உள்ள பணிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

மேலும் அவர் பணிகள் அனைத்தும் தரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் பொதுமக்களிடம் மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.அப்போது
பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், கலைச்செல்வி பாலகிருஷ்ணன், தேவிகாஅருண் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!