International Women’s Day in Perambalur: “Nari Shakti Awareness Run” organized by Nehru Yuvakendra and Hope Trust!
இந்திய அரசின் நேரு யுவகேந்திரா, பெரம்பலூர் ஹோப் டிரஸ்ட் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாரி சக்தி விழிப்புணர்வு ஓட்டம் (அரசின் பெண்களுக்காண திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு) பெரம்பலூர் மாவட்ட அலுவலர் கீர்த்தனா, பெரம்பலூர் ஹோப் டிரஸ்ட் திட்ட இயக்குனர் ஆர்.எஸ். திவ்யா ஆகியோர் தலைமையில் நடந்தது. ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ரஞ்சனா கொடி அசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக மகளிர் உடல் நலம் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார். 50 க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள், இளம்பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டு, பாலக்கரையில் இருந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் வரையில் ஓடினர். விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு , பரிசும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.