Interview for Nutrition Center Applicants: Perambalur Collector Santha Info!

model
பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு மைய பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அமைப்பாளர் பணிக்கு அக்.13 மற்றும் 14.தேதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு அக்.15. அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணப்பதார்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணப்பத்தாரர்கள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தங்களுடைய அசல் ஆவணங்கள், இப்பதவிக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகை ரசீது மற்றும் நேர்முகத்தேர்வுக்கான அழைப்பாணையுடன், அவர்கள் விண்ணப்பித்த பணியிடத்திற்கான நேர்காணல் நடைபெறும் நாளில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.