கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் || Interview with applicants for Veterinary Care Assistants

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் செங்கோட்டையன் விடுத்துள்ள தகவல் :

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புதவற்கு நேர்காணல் தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் 10.05.2017 முதல் 17.05.2017 வரை தினமும் (14.05.17 தவிர) காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனை அருகில் துறையூர் ரோடு பெரம்பலூர் என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள தினத்தில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை http://www.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து 05.05.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நேர்முக அழைப்பாணைகளை 08.05.2017 மற்றும் 9.05.2017 ஆகிய நாட்களில் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப் படமாட்டார்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!