Interview yearly for pensioners

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கான வருடாந்திர நேர்க்காணல் ஏப்.1- முதல் ஜுன் 30 வரை நடக்கிறது

பெரம்பலூர் மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான 2017-2018ம் ஆண்டிற்கான வருடாந்திர நேர்க்காணல் ஏப்.1- முதல் ஜுன் 3 வரை நடைபெற உள்ளது. இந்த நேர்க்காணலில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தவறாமல் ஆஜராக வேண்டும். நேர்க்காணலில் ஆஜராகாதவர்களுக்கு ஆகஸ்ட்-2017 ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசின் ஜீவன் பிரம்மன் மின்னணு வாழ்வு சான்றிதழ் (Jeevan Pramman Digital Life Certificate ) (DLC) ) 01.04.2017க்கு பிறகு பெற்றளிப்பதன் மூலமும் நேர்க்காணல் பதிவு செய்யலாம்.

இந்த ஜீவன் பிரம்மன் மின்னணு வாழ்வு சான்றினை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அனைத்து வட்ட அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையத்தில் தங்களது ஆதார் எண், ஓய்வூதியம் தொடர்பான விபரங்கள் அளித்து கைவிரல் ரேகை பதிவு செய்து ஓய்வூதியர்கள் பெறலாம்.

இதற்காக ரூ.10- கட்டணம் வசூலிக்கப்படும். 01.04.2016க்குப் பிறகு இச்சான்று பெற்றளிப்பதன் மூலம் நோக்காணலுக்கு நேரில் வருவதிலிருந்து விலக்கு பெறலாம். ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!