Intimidated and sexually harassed near Perambalur! AIADMK Poolambadi town secretary arrested

பெரம்பலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அதிமுக பேரூராட்சி செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அதிமுக பேரூர் செயலாளராக இருப்பவர் வினோத்(48).இவர் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் மீது பூலாம்பாடியை சேர்ந்த சுய நினைவில்லாத மாற்றுத் திறனாளியின் மனைவி ஒருவர்(சுதாலட்சுமி 40)என்பவர் அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் வினோத் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க சொன்னதாகவும் சம்மந்தப்பட்ட பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் நீ நடத்தும் கேஸ் கம்பெனியோடு உன்னையும் கொளுத்தி விடுவேன் என அதிமுக நகரசெயலாளர் வினோத் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் தொந்தரவுக்கு உள்ளான பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூலாம்பாடி அதிமுக நகரசெ யலாளர் வினோத்தை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைமுயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள பூலாம்பாடி அதிமுக பேரூராட்சி செயலாளர் வினோத்தை சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

பாலியல் புகாரில் பூலாம்பாடி அதிமுக பேரூர் செயலாளர் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!