Introduction of Internet service to check the documents of the servers abroad; Perambalur Collector Information.

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் சார்பு நுழை இசைவு (Dependent Visa) கோரும் இந்தியர்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிடப்பட வேண்டும் என்று சில நாடுகள் கோருவதால் மேற்காண் ஆவணங்களை இணைய வழியில் சரிபார்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக மத்திய அரசு e-sanad என்ற இணைய வழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அனைத்தும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் e-sanad இணைய வழி மூலம் சரிபார்க்கப்பட்டு முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்காணும் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தொடா;புடைய தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில், பொது மக்கள் www.esanad.nic.in என்ற இணையத்தில் விபரங்களை பதிவு செய்து, ஆவணங்களை பி.டி.எஃப் வடிவில் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தினால், இணைய வழியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அவரவர்களுடைய வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த இணைய வழிச் சேவையினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் பொது மக்கள் பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!