Introductory meeting of administrators of Perambalur District Charitable Organizations Federation!
பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றி, துளிகள் அறக்கட்டளையின் பொருளாளர் ஆசைத்தம்பி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், ,சிவம் அறக்கட்டளையின் நிறுவனர் சிற்றம்பலம் மாவட்ட செயளாளராகவும்., துளிகள் அறக்கட்டளையின் நிறுவனர் சூரியக்குமார் பொருளாளராகவும், டைடு அறக்கட்டளையின் நிறுவனர் இராமலிங்கம் தலைவராகவும், கிரீன்லைப் அறக்கட்டளையின் நிறுவனர் ஞானபிரகாஷ் துணைத் தலைவராகவும், இமயம் அறக்கட்டளையின் நிறுவனர் சரஸ்வதி துணை செயலாளராகவும் பொன்னாடை போர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். பெரம்பலூர் மாவட்ட அறங்காவல் குழுத் தலைவர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராகவும் மாநில துணை தலைவர்கள் சசிக்குமார், இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுமார் 55 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விளம்பரம் https://dsmatrimony.net/