English Summary: Rural Self Employment Training Center IOB Bank offered 27 types of training to 2,100 persons in employment have trained 2,584 people: official information

பெரம்பலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரும், கிராம சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனருமான(பொறுப்பு) பா.அருள்தாசன் தெரிவித்துள்ளதாவது:

iob

பெரம்பலூர் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் 11.10.2011 முதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இதில் இருபாலருக்கும் தையல் பயிற்சி, மின்சாதனப்பொருட்கள் – வேளாண் கருவிகள் – ஜே.சி.பி எந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சி, மாடு வளர்ப்பு பயிற்சி, அழுகுக்கலை பயிற்சி, சணல் மூலம் பைகள் – கூடைகள் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி,

சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பயிற்சி, கோழி வளர்ப்பு குறித்த பயிற்சிகள் என மொத்தம் 27 வகையான பயிற்சிகள் தொடர் ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த கிராம சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இதுவரை 104 பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,584 நபர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் 1,004 பேர் ஆண்கள், 1,580 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 1,520 நபர்கள் சுய தொழில் செய்து வருகின்றனர். மேலும், 240 நபர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆகமொத்தம் 2,100 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்த பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 340 பேருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் சுய தொழில் துவங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரம்பலூர் சங்குப் பேட்டை, புதிய மதன கோபாலபுரத்தில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

சுயதொழில் துவங்க விருப்பமுள்ள நபர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் வழங்கப்படும் இதுபோன்ற பயிற்சிகளில் பங்குகொண்டு பயன்பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!