Is the river sleeping? Like Paramartha Guru’s story, those who come to power at the center try to impose Hindi in Tamil Nadu from time to time, it is a sacrifice as long as there is DMK: At the Perambalur language war martyrs meeting, MP Palanimanickam speech!

பெரம்பலூர் மாவட்ட தி.மு க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன் தலைமையில் நடந்தது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் த.கருணாநிதி வரவேற்றார். கூட்டத்திற்கு மொழிப்போர் தியாகி மூங்கில்பாடி ரெங்கராஜ், மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர்கள் கு.க.அன்பழகன், பி. திருவரசன், சு.சதீஸ், அ‌ தண்டபாணி, அ.மாது (எ) மருதமணி, சு.அருண்குமார், எஸ்.சையத் சுல்தான்ஷா, ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் ஜி.ஆரோக்கியசாமி, க.சிவானந்தம், வெ.முருகேசன், மு.முருகானந்தம், பெ.இளையராஜா, ம.தமிழ்வேந்தன், பா.ரினோபாஸ்டின், சீ.குமரன்,ரெ.பால்ராஜ், வ.செல்வன், ஜா.சலீம்பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தி.மு.க‌ உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் -முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.பி., தலைமை கழக பேச்சாளர் மதுரை குருசாமி, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் – சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முன்னணி தோழர்கள் தாங்கள் வாழ்நாளில் கிடைக்காத பெரும் பெயராக தங்களுடைய கடமையை, கழகத் தோழர்கள் மொழிக்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைத்து நினைவு கூறும் வாய்ப்பாக இந்த நாளை நினைத்து அந்த நாளில் கழகத்தின் வரலாற்றை திரும்ப நினைத்துப் பார்க்கிற வாய்ப்பு கழக தோழர்கள் எடுத்து ஏற்படுத்துவது, நம்முடைய இனத்தின், மொழியின் பெருமையை நீண்ட காலம் கட்டிக் காத்த காரணமாக இருந்த தந்தை பெரியாரை பேரறிஞர் அண்ணாவை தலைவர் கலைஞரை இன்றைக்கும் கட்டிக் காக்கின்ற தளபதியை நினைவு கூறுகின்ற வாய்ப்பாக அமையும்.

இங்கு, பேசிய குருசாமி அவர்களும் மற்றவர்களும் மொழிக்காக உயிரினத்த சின்ன சாமியை நினைவு கூர்ந்தார்கள். அவர்களை வணங்கி விட்டு உங்களிடத்திலே உரையாற்ற தொடங்குகிறேன். ஏனென்றால் 1964 ஆம் ஆண்டு இதே ஜனவரி திங்கள் 25 ஆம் நாள் தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று திருச்சி புகைவண்டி சந்திப்புக்கு எதிரே விடியற்காலையில் உடம்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு உயிர் மாய்த்த முதல் களப்பலி இந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தில்தான். பின் நாளில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலர் புகழேந்தி போன்றவர்கள் தன் இன்னுரை மாய்த்துக் கொண்டார்கள்.

1938 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவும் ராஜாஜி அவர்கள் அன்று சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவர் டெல்லியில் இருந்த திமிரின் அடிப்படையில் கட்டாய இந்தி புகுத்திய போது, தந்தை பெரியார் சமூக நீதிக்காக போராடிய வகுப்புவாதத்திற்காக போராடிய பெரியார் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு தன்னுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள்.

சுதந்திரம் என்பது ஆங்கிலேயர் இடத்தில் இருந்து இன்னொரு வழியாக மேட்டுக்குடி இனரத்தும் பார்ப்பனரிடத்தும் அய்யங்காரிடத்தும் சென்று சரணடைந்து விடும் என கருதி காங்கிரஸ் இயக்கத்தில் 3 முறை அந்த காலத்தில்.. காங்கிரஸ் என்றால் நாயக்கர் நாயுடு முதலியார்கள் இருந்த காலம். கல்யாணசுந்தர முதலியார், ராமசாமி நாயக்கர், வரதராஜ் நாயுடு போன்றவர்கள் இருந்த காலத்தில், பெரும்பாலோனோர் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தும் தன்னுடைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் நீதி கட்சிக்கு வந்தும், நீதி கட்சியில் ஜமீன்தார்களும் மன்னர்களும் தங்களுடைய கொள்கைக்காக நிற்கிறார்கள் என்றும், அதிலிருந்து வெளியேறி திராவிடர் கழகத்தை உருவாக்கி, போராட்டத்தின் மூலம் இந்தியை வாபாஸ் பெற செய்தார். 1938 ல் தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம், இந்தியா சுந்திரம் அடைந்த பின்னரும், இதுவரை தொடர்ந்து நடந்து வருகிறது. மத்தியில் ஆட்சிக்கு வருவபர்கள் எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது இந்தி திணித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மேலும், பரமார்த்த குரு கதையில் வருவது ஆறு தூங்குகிறாதே அவ்வப்போது மத்திய அரசு, தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு முயற்சியை செய்து வருகிறது. ஆனால், திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு என பெயர் சூட்டியதோடு, தமிழ் ஆங்கிலம் இரண்டையும் ஆட்சி மொழியாக அறிவித்து, சட்ட மன்றத்தில் அறிவித்தார். பல போராட்டங்களை முன்னெடுத்தன் காரணமாக இன்று தமிழ் வளர்ந்திருக்கிறது. தமிழ்ககுடிகள் வளர்ந்துள்ளனர்.

இன்று நாள்தோறும், இந்தி பேசுபவர்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். எதற்காக, கொத்தனார், சித்தாளர். விவசாய கூலி வேலைகளுக்கும், ஹோட்டல்களிலும் பணி செய்கிறார்கள். தமிழர்கள் தமிழுடன் ஆங்கிலமும் சேர்த்து படித்ததால் இன்று அமெரிக்க கனடா போன்ற நாடுகளில் பல உயர் பொறுப்புகளில் அதிக சம்பாதிக்கினற்னர். இந்தி படித்திருந்தால், இந்த உயர்வு தமிழர்களுக்கு கிடைத்திருக்காது.

அதிமுகவினரும், அடுத்த தெருவில், மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்துவதாக குறிப்பிட்டீர்கள். அவர்கள் எந்த அடிப்படையில் மொழிப்பொர் தியாகிகள் கூட்டம் நடத்துகிறார்கள் என அவர்களுக்கே தெரியும். திமுக தொண்டர் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைச்சாலை சென்றனர். அதோடு. இல்லாமல் தலைவர் கலைஞர் தனிச் சிறையில் பாளையங்கோட்டையில் அடைக்கப்ட்டார். பல தியாகிகள் போராட்டத்தால் இன்று தமிழும், தமிழர்களும் உயர்ந்து நிற்கிறோம். மொழிக்காக பாடுபட்ட தியாகிகள் அனைவரையும் நினைத்து பார்ப்பதோடு, என்றும் மறவாமல் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். என பேசினார்.

மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி,
இரா.ப. பரமேஷ்குமார், அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.இராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, என்.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம்,

பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.இரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர், மு.வெங்கடேசன், ஏ.எஸ்.ஜாகீர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல்பாரூக், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ப.செந்தில்நாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.சுந்தர்ராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளுவாடி ரவி,

மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி.கட்டுராசா, ஏ.எம்.கே.கராகாலன், எ.ரசூல்அகமது, தங்க.கமல், டி.ஆர்.சிவசங்கர், தொ.மு.ச.பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.எம்.குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்,

பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனா அண்ணாதுரை, க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றிய துணை பெருந் தலைவர்கள் எம்.ரெங்கராஜ், சாந்தாதேவிகுமார், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ், பாக்கியலெட்சுமி செங்குட்டுவன், வள்ளியம்மை ரவிச்சந்திரன், பேரூராட்சி துணை தலைவர்கள் கீதா துரைசாமி, சரண்யா குமரன்,நகராட்சி உறுப்பினர்கள் ஷகர்பானு, ரகமத்துல்லா, சுசீலா செந்தில்குமார், எஸ்.பி. சிவக்குமார், ரா.சித்தார்த்தன், ம.சேகர், துரை.காமராஜ், வெ.நல்லுசாமி,
கு.ராகவி, சந்திரலேகா,சி.சித்ரா, எஸ்.ஷாலினி, ஜெயப்பிரியா மணிவாசகம், சசி இன்பெண்டா, மணிவேல், மற்றும் வார்டு,கிளைக் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பெரும் திராளக கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் எம்.மணிவாசகம் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!