It is better to get a in Perambalur Chief Minister by admk, special yagna padalur
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோவிலில், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுகவினர் சிறப்பு யாகம் மற்றும் அபிசேகங்களை நடத்தினர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர், மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோவிலில் சிறப்பு யாகங்களை நடத்தினர். இதோடு பூமாலை சஞ்சீவிராயருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. இதில், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மா.சந்திரகாசி, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் அ.வேல்முருகன், முன்னாள் பாடாலூர் ஊராட்சி மன்ற தலைவர் வீரமுத்து, உள்பட கட்சி பிரமுகார்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் மதியம், அன்னதானம் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.