It is better to get a perfect Jayalalithaa in Perambalur near Chandi Yagna held special by AIADMK
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டி பெரம்பலூர் மாவட்ட இளைஞர் – இளம்பெண்கள் பாசறை சார்பில் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை நீலியம்மன், செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், சண்டி யாகம் மற்றும் வேண்டுதல்கள் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப.குமார் எம்.பி. தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கர்ணன், நகர செயலாளர் ராஜ பூபதி, பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.கே.கார்த்திகேயன் மாவட்ட நிர்வாகிகள் குலோந்துங்கன், ராஜேஸ்வரி, ராணி, கவுரி, பெருமாள், பாடாலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரமுத்து, பேபி காமராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார் செய்து இருந்தார்.
முன்னதாக, காலையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து சிறப்புடன் வாழ பெரம்பலூர் நகர கழகத்தின் சார்பாக நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில் எளம்பலூர் சாலை உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் , அனைத்து அணி பொறுப்பாளர்கள் , மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.