It was because of the Happy Street program that he was introduced to drug use, Perambalur independent candidate Rengaraj campaign speech!
பெரம்பலூர் லோக் சபா தேர்தலுக்கு, சுயேட்சை வேட்பாளராக கப்பல் சின்னத்தில் ரெங்கராஜ் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்க அவரது தமிழக நாயுடு கூட்மைப்பு மற்றும் ஆதரவாளர்களுடன் அனல் பறக்கும் கொளுத்தும் வெயிலிலும், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிக்குளம் சிவன் கோயில் முன்பு, அக்கூட்டமைப்பின் உறுப்பினர் பாலன் தலைமையில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
அதில், பெரம்பலூர் மாவட்ட நாயுடு கூட்டமை செயற்குழு செயலாளர் ராஜா பேசியதாவது:
இந்த ஊரில் குடிநீர் வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை, ரயில் வசதி இல்லை இந்த குறைகளை தீர்த்து வைப்பார். கப்பல் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்தால் மாதம் இருமுறையும் நேரில் வந்து சந்திப்போம் குறைகளை நிவர்த்தி செய்வோம், மாநில சலுகைகளை பெற்று தருவோம்.
மகளிர் திட்டம் சரியாக கிடைப்பதில், மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை என பேசினார்.
சுயேட்சை வேட்பாளர் ரெங்கராஜ் பேசியதாவது:
பெரம்பலூரில் நீர் வசதி குறைவாக உள்ளது. காவிரி நீரை பைப் லைன் மூலம் லாடபுரம் ஏரியில் கொண்டு வந்து நிரப்பப்படும். பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர வழிவகை செய்யப்படும். சின்னவெங்காயம், பருத்தி, நெல் மற்றும் இதர பொருட்களின் கொள்முதல் நிலைய குடோன் அமைத்தப்படும்.
பஸ் வசதியை அதிக படுத்தப்படும். அக்கிரப்புகளை அகற்றி தரப்படும். ஆரம்ப சுகாதர நிலையத்தை மேம்படுத்தப்படும். அழிந்து வரும் வனம் சார்ந்த காடுகள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
ஹோப்பி ஸ்ட்ரீட் ஏன்ற நிகழ்ச்சி தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களில், நகரங்களிலும் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது அதில் எல்லாரும் ஹோப்பிய தான் இருந்தாங்க. இதன் மூலம் தான் இளைஞர்களுக்கு போதை பொருள் பயன்படுத்த சொல்லி உற்சாகத்தை தூண்டி விடப்பட்டது. இன்று போதை பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
முருகன் கோயிலை மேம்படுத்தப்படும் .பெரம்பலூர், துறையூர், லால்குடி பகுதியில் பேருந்து நிலையங்களும் சீரமைத்து மேம்படுத்தப்படும்.
வேட்பாளர்கள் பணம் நிறைய செலவு செய்கிறார்கள், அது எல்லாம் உங்கள் வரிகள் மற்றும் வருமானத்தில் சுரண்டப்பட்ட பணம்.
500 ரூபாயை வாங்கிட்டு ஒட்டு போடாதீங்க. பணத்திற்காகவும், இலவசத்திற்காகவும் ஓட்டு போடுவதை தவிருங்கள். நான் வெற்றி பெற்றால் ஆளும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவேன். தி.மு.க தேர்தல் அறிக்கை 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுக்கப்படும் என்று கூறுவது முடியாது ஒன்று குறைந்தது 700 ரூபாய் ஆகும்.
நான் இந்த பகுதியை சேர்ந்தவன், நான் கூறிய வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.எனக்கு கப்பல் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்தார். அப்போது ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.