Items worth about Rs 1 lakh stolen from locked house in Perambalur!
பெரம்பலூர் துறையூர் சாலை, கல்யாண் நகரை சேர்ந்த நடராஜன் மகன் தமிழ்மாறன் (52). கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான குரும்பலூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருவதால் கடந்த 2 மாதங்களாக மனைவி ஜெயசித்ரா (47), மகன் நவீன் (21) மகள் தாரணி (19) ஆகியோருடன் பகலில் கல்யாண் நகர் வீட்டிலும், இரவில் குரும்பலூரிலும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு இரவு 80.30 மணியளவில் வீட்டை பூட்டி வீட்டு குடும்பத்துடன் குரும்பலூருக்கு சென்று விட்டனர். இன்று காலை 11.30 மணியளவில் நவீன் தனது லேப்டாப்பை எடுப்பதற்காக கல்யாண் நகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து குரும்பலூர் சென்று தனது அம்மாவை அழைத்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஒரு லேப்டாப் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த, பெரம்பலூர் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.