J Jayalalithaa’s 75th birthday: AIADMK pays tribute in Perambalur!
இன்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈ.பி.எஸ். அணியில, முன்னாள் எம்.பி மருதைராஜா தலைமையில் தலைமையில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம், முத்த மிழ்செல்வன், இளஞ்செழி யன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட மகளிர் செயலாளர் ராஜேஸ்வரி, வெங்கலம் லட்சுமி, மாவட்ட அவை தலைவர் குணசீலன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, செல்வகுமார் , பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, வக்கீல் கனகராஜ், மகளிர் அணி, உட்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் மாவட்ட வர்த்தகர் அணி ஏ.கே.ராஜேந்திரன், குரும்பாளையம் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், ஈபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் திரளான தொண்டர் கலந்து கொண்டு ஜெ.ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தகவல் அணிச் செயலாளர் பெருமாள், உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக> பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் , ஜெ.ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர்.