Jallikattu in Thrissur district in Thrissur district: There is no facility for viewers
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு வெகுசிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 325க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்ட்ட காளைகள் கலந்து கொண்டன. அவைகளில் 266 காளைகள் மாடுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 18 மாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 248 காளைகள் கலந்து கொண்டன.
அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு வெளியூரில் இருந்த வருகை புரிந்த மாடு பிடி வீரர்கள் மற்றும உறவினர்களுக்க வடை, பாயசம் மற்றும் கறி விருந்தும் அளித்தனர். காளைகள், 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்ட்டனர்.
அரசலூருக்கு வெளிப்பகுதியில் வாடி வாசல் அமைக்கப்பட்டு காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. அங்கு திரளாக திரண்டு இருந்த மாடுபிடிவீரர்கள் காளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு கையில் சிக்காமலேயே மிரட்டி சென்றது. ஒரு சில காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் முட்டிதிலும், தூக்கி வீசியதிலும் சிறுசிறு காயமடைந்தனர்.
காளைகள் அடக்கியவர்களுக்கு அண்டா, குண்டா, வெள்ளி அரைஞாண் கொடி, ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்ட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். ஆனால், வருவாய் துறையினரோ மற்றும் விழாக்குழுவினரோ, பார்வையாளர்கள், கண்டு களிப்பதற்கு போதுமான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. பார்வையாளர்கள் மாடம் அமைக்காததால் பொதுமக்கள் இரண்டு சக்கரம் உள்ள டிராக்டர் டிப்பரில் நின்று கொண்டு பார்த்து ரசித்தனர். நல்வாய்ப்பாக வயலில் நிறுத்தப்பட்டிருந்த அவற்றில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
ஜல்லிக்கட்டு நடந்ததால் அரசலூர் கிராமமே உறவினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களால், இன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.