Jamabandhi in Perambalur District: Collector Karpagam led in Gunnam taluk.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று நடந்தது.

குன்னம் தாலுகாவிற்கான ஜமாபந்தி, கலெக்டர் க.கற்பகம், தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இதில், வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம் (வடக்கு), பெண்ணகோணம் (தெற்கு), வடக்கலூர், ஒகளூர் (மேற்கு), ஒகளூர் (கிழக்கு), சு.ஆடுதுறை மற்றும் அத்தியூர் (வடக்கு) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கலெக்டர் கற்பகம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அனைத்துத்துறைகளின் அலுவலர்களிடமும் பேசிய அவர் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு மனுக்களின் மீதும் தனிக்கவனம் செலுத்தி, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட சம்மந்தப்பட் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ”பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். ஒருவருடைய நியாயமான கோரிக்ககளை உடனடியான நிறைவேற்ற வேண்டியது நம் கடமை” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் அறிவுறுத்தினார்.

இதை அனைவரும் மனதில் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, தங்கள் கோரிக்கை நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையுடன் நம்மைத் தேடி வரும் மக்களின் எதிர்பார்ப்பை, நமது நேர்மையான நடவடிக்கையின் மூலம் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர், இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

இதேபோல இன்றைய ஜமாபந்தியில், குன்னம் தாலுகாவில் 107 மனுக்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 175 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 48 மனுக்களும், பெரம்பலூர் தாலுகாவில்51 மனுக்களும் பெறப்பட்டுள்ளது.
வரும் ஜுன்20 , 21 , 25, 27 ஆகிய நாட்களில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!