Jamabandhi petitions, taluck office e-service centers, can apply online: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கோவிட் 19 நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசாணை நிலை எண்395, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்ணம(வ.நி3(2)) துறை, நாள்-07.06.2021 படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1430 ஆம் பசலி (2020-2021) க்கான ஜமாபந்தி மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படாமல் மனுக்களை உரிய ஆவணங்களுடன் தாங்களே https://www.gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய தள முகவரி வாயிலாக பதிவேற்றம் செய்யவோ அல்லது தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ 31.07.2021 வரை பதிவேற்றம் செய்து அதற்குரிய ஒப்புதல் ரசீதினை தவறாது பெற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி வைத்து பொதுமக்கள் மனுக்களை இட்டுச் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் சேர்க்கலாம். மேற்கண்ட முறைகளில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு பதில் வழங்கப்படும்.
மேலும், கொரோனா நோய் பரவலை தடுக்கும்பொருட்டு பொதுமக்கள் இ-சேவை மையங்களில் மனுக்கள் அளிக்கும்போது தவறாது தமிழக அரசின் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டாயம் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றிடவும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!