Jamabandi in Perambalur district: 528 petitions received, immediate solution for 217: Collector Information
பெரம்பலூர் மாவட்டத்தில் 1427 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நேற்று துவங்கப்பட்டது.
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையிலும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தலைமையிலும்,வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) இருதயமேரி தலைமையிலும், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேதுராமன் தலைமையிலும் வருவாய் தீர்வாயங்கள் நடைபெற்றது.
இதில் பெரம்பலுhர; வட்டாட்சியர; அலுவலத்தில் நடைபெற்ற (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதில் 52 நபர்களுக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 3 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார்.
பெரம்பலூர் வட்டத்தில் 180 மனுக்கள் பெறப்பட்டு 55 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 125 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
வேப்பந்தட்டை வட்டத்தில் 115 மனுக்கள் பெறப்பட்டு 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 68 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
குன்னம் வட்டத்தில் 127 மனுக்கள் பெறப்பட்டு 80 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 30 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
ஆலத்தூர் வட்டத்தில் 106 மனுக்கள் பெறப்பட்டு 39 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 42 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
ஆகமொத்தம் மாவட்டம் முழுவதிலும் நேற்று நடந்த ஜமாபந்தியில் 528 மனுக்கள் பெற்ப்பட்டதில் 217 மனுக்களுக்கு நத்தம் பட்டா மாற்றம், பட்டா நகல், முதியோர; உதவித்தொகை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 46 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 265 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
பெரம்பலூர் வட்டத்திற்கு 25.05.2018, 29.05.2018 ஆகிய நாட்களிலும், குன்னம் வட்டத்திற்கு 25.05.2018, 29.05.2018, 30.05.2018 ஆகிய நாட்களிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு 25.05.2018, 29.05.2018, 30.05.2018 ஆகிய நாட்களிலும், ஆலத்தூர் வட்டத்திற்கு 25.05.208, 29.05.2018, 30.05.2018 ஆகிய நாட்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.