பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று (மே.24-)அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்றது. இதில், அனைத்து வட்டங்களிலும் 322 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 152 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 53 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 117 மனுக்கள் உரிய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆலத்தூர் வட்டத்தில் கொளக்காநத்தம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு), கொளத்தூர் (கிழக்கு), ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் பசும்பலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பெரிய வடகரை, நூத்தப்பூர் (தெற்கு), நூத்தப்பூர் (வடக்கு), பில்லாங்குளம், கை.களத்தூர் (மேற்கு), கை.கள்த்தூர் (கிழக்கு), காரியனூர், பசும்பலூர் (வடக்கு), பசும்பலூர் (தெற்கு), பாண்டகப்பாடி, திருவாலந்துரை, அகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பொம்மனப்பாடி, வேலூர் மற்றும் பெரம்பலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் கீழப்புலியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), ஆண்டிக் குரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற்றது.

இதே போல், நாளை ஆலத்தூர் வட்டத்தில் கூத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட தொண்டடபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு), ஆதனூர் (தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு), ஜெ.ஆத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் வாலிகண்டபுரம் உள்வட்டத்திற்கு உட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்ம தேசம், மேட்டுப்பாளையம் (தெற்கு), மேட்டுப்பாளையம் (வடக்கு), பிம்மலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு), தேவையூர் (தெற்கு), வாலிகண்டபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் உள்வட்டத்திற்குட்பட்ட அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு), அயிலூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் வரகூர் உள்வட்டத்திற்குட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பொpயம்மாபாளையம், பெரிய வெண்மணி (மேற்கு), பெரிய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

இந்த வருவாய் தீர்வாயங்களின் இறுதிநாளான நாளை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குடிகள் மாநாடு அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். எனவே பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயங்களில் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!