Jewelery snatched from woman near Perambalur!

கற்பனை காட்சி
பெரம்பலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மனைவி பாமா (50). இவர், அதே கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் இன்று காலை பங்கேற்று விட்டு சாத்தனவாடி- அழகாபுரி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானன். இதுகுறித்து பாமா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வி.களத்தூர் போலீசார் மர்ம பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.