கலால் வரி உயர்வை எதிர்த்து நகை கடை உரிமையாளர்கள் நடத்தி வந்த கடையடைப்புப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதித்தது. இதை எதிர்த்து நகைக் கடை உரிமையாளர்கள் கடந்த நான்கு நாள்களாகப் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கலால் வரி உயர்வு குறித்து மத்திய அரசு பரசீலனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து போராட்டத்தை தாற்காலிகமாக திரும்ப பெறுவதாக சென்னை தங்க, வரை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று முதல் நகைக்கடைகள் திறக்கப்பட்டது. அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து, மும்பையில் நடைபெறும் நகைக் கடை உரிமையாளர்கள் கூட்டத்துக்குப் பின் முடிவு செய்யப்படும் என ஜெயந்திலால் அறிவித்தார்.