Jewelry, cash stolen from locked house near Perambalur; Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் ரஹமத் பீவி (65). திருமணமாகத இவர், தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு வீட்டை பூட்டி விட்டு, அருகே உள்ளளவர்கள் வீட்டில் படுத்து கொள்ள சென்றுவிட்டார்.
இன்று அதிகாலை, திரும்ப வந்த பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் வைக்கப்பட்டடிருந்த சுமார் 4 பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார், வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்து, அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.