Journalists of Perambalur who bought and sent drinking water to the people affected by the storm in Chennai!
பெரம்பலூர்: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பத்திரிகை நிருபர்கள்,தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் ஒன்று திரண்டு வழங்கிய நிதியில் 1லிட்டர் அளவு கொண்ட 1666 தண்ணீர் பாட்டில்களை வாங்கி அனுப்பி வைத்தனர்.
நிதியுதவி வழங்கிய செய்தியாளர்கள் விவரம்: தினமலர் நிருபர் செல்வராஜ் ரூ.500. தினத்தந்தி நிருபர் குருராஜ் ரூ.1000. தினகரன் நிருபர் வில்சன் ரூ.2000. ராஜ் டி.வி.நிருபர் சிவானந்தம் ரூ.1000. நியூஸ் தமிழ் நிருபர் துரைசாமி ரூ.1000, கலைஞர் டி.வி.நிருபர் செந்தில் முருகன் ரூ.2000, தினகரன் போட்டோகிராபர் குணசேகரன் ரூ.1000, நியூஸ் 7 நிருபர் ஜீவா ரூ.500, வேப்பந்தட்டை தினத்தந்தி நிருபர் ஞானவேல் ரூ.1000, குன்னம் தினகரன் நிருபர் ராஜகுரு ரூ.500, விடுதலை நிருபர் வேல்முருகன் ரூ.500 என வழங்கி உள்ளனர்.
1666 தண்ணீர் பாட்டில்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு முன்னிலையில் வழங்கினர்.