JP Natta road show in Musiri in support of BJP alliance candidate Parivendar!

பிஜேபி தேசிய தலைவர் ஜேபிநட்டா, திருச்சி மாவட்டம் முசிறியில், தனது கூட்டணி வேட்பாளரான ஐஜேகே பாரிவேந்தரை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசிதாயவது:

10 கோடி இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 18,000 கிராமங்கள் மின் வசதி பெற்றுள்ளது, 10 கோடி கழிப்பறைகள் கட்டி தரப்பட்டுள்ளது, பெண்கள் மேம்பாடு அடைய அவர்கள் தலை நிமிர்ந்து நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

வரும் ஐந்தாண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என மோடி வாக்குறுதி அளித்துள்ளார், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை 3 தவணைகளில் வழங்கப்படுகிறது,.

தமிழகத்தில் 12 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக மோடி பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார், லஞ்சத்தை ஒழிப்பதே மோடி தனது லட்சியமாக கொண்டுள்ளார்.

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோள், காசி தமிழ் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது, தமிழக மக்கள் காசிக்கு செல்வதும், காசி மக்கள் தமிழகத்திற்கு வருகை தருவதும் ஒரு கலாச்சார பரிமாற்றத்தை உருவாக்கும் என்றார். அப்போது, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், பாஜக, பாமா, தமாக, தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!