Kalaigar’s centenary public meeting on behalf of Perambalur district DMK!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் தேரடி திடலில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர் வரவேற்புரையில் நடந்தது.

கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், இன்றைக்கு தமிழக வரலாறு தெரியாமல், காமராஜர் பிரதமராக வரவிடாமல் தடுத்தது தி.மு.க.என்று வேலூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க.சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பது அமித்ஷாவிற்கு தெரியாது.

எமர்ஜென்சி காலத்தில் காமராஜர் கைது செய்யப்பட்டால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியவர் கலைஞர். காமராஜர் அக்டோபர்-02,ம் தேதியன்று மறைந்தார். அவருக்கு தி.மு.க. அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்து, கிண்டியில் நினைவு மண்டபம் அமைத்தது தி.மு.க.என்பது அமித்ஷா விற்கு தெரியாது. தமிழகத்தில் ரூ.2.லட்சம் கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள அமித்ஷாவிடம் நான் கேட்கிறேன், தமிழகத்தில் இருந்து சென்ற ஜி.எஸ்.டி, வருமானவரித்துறை தொகை ரூ.6 லட்சம் கோடி எங்கே போனது, வரலாறு தெரியாமல் அமித்ஷா பேசக்கூடாது என்று அமித்ஷாவிற்கு சவால் விட்ட ஆர்.எஸ்.பாரதி, 1974-ல் அப்போதைய மத்திய அரசிற்கு எதிராக பாட்னாவில் இருந்து புறப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களால் அப்போதைய ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதேபோல் வருகிற 23- ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவின் நெம்பர் 1 முதலமைச்சராக செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின், 2024,ல் பிரதமராக வருவார் என்றும் பேசினார்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசுகையில், கலைஞரின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெம்பர்-01, முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்று பேசினார்.

இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர்
டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், தி.மதியழகன், சோமு.மதியழகன், சி. ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் ஆர்.இரவிச்சந்திரன், செல்வலட்சுமிசேகர், மு.வெங்கடேசன், எ.எஸ்.ஜாகிர்உசேன்,

யூனியன் சேர்மன்கள் வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை பெரம்பலூர் மீனா, வேப்பந்தட்டை ராமலிங்கம், துணை சேர்மன்கள் கு.சாந்தாதேவிகுமார் எம்.ரெங்கராஜ், பேரூராட்சி தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, அரும்பாவூர் வள்ளியம்மை , துணை தலைவர்கள் குரும்பலூர் கீதா துரைசாமி, அரும்பாவூர் சரண்யா குமரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, சிறுபான்மை அணி மாவட்ட அமைப்பாளர் அப்துல்பாரூக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன்,

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும் – மாவட்ட அரசு வழக்கறிஞருமான ப.செந்தில்நாதன், நகராட்சி உறுப்பினர்கள் நல்லுசாமி, சித்தார்த், துரை.காமராஜ், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாலை.மணிவண்ணன்,உள்ளிட்ட 2- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரும்பாவூர் பேரூர் செயலாளர் ஆர்.இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!