Kalaignar Centennial Celebration; On behalf of Perambalur district engineer team, speech competition!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி,
பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளரம், திருச்சி மண்டல பொறுப்பாளருமான இரா.ப.பரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

பொறியாளர் அணியின் மாவட்ட தலைவர் பி.எஸ்.வேல்முருகன் வரவேற்றார். அமைப்பாளர் தி.இராசா , துணை அமைப்பாளர்கள் கே.பெரியசாமி, இரா. ராஜாராம், ஜி.ராஜசேகர், மாவட்ட துணை தலைவர் பி.செல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். இதில், தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறைய உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன் மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் ஆகிய தலைப்புகளில் மாணவ , மாணவிகள் பேசினார்கள். பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சேகர், தனலெட்சுமி சீனிவாசன் இருபாலர் கல்லூரி பேராசிரியர் பாரதி ஆறுமுகம், தி.மு.க.மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன் ஆகியோர் இருந்தனர்.

இந்தப் போட்டியில் சட்டமன்ற தொகுதிகளில் முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவி ஹரினி என்பவருக்கு ரூ.10000, இரண்டாம் பரிசாக கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், ரூ.5000 ,
மூன்றாம் பரிசாக கல்பாடி எறையூர் மாணவர் ராமமூர்த்தி என்பவருக்கு ரூ.3000 வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, ந.ஜெகதீஷ்வரன்,‌ மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், அரணாரை ஜெய்குமார் மற்றும் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!